ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
By DIN | Published on : 14th January 2018 01:53 AM | அ+அ அ- |
திருநெல்வேலி அருகே ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர்கள் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி அருகே திருவேங்கடநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயக்குமார் (30). ஆட்டோ ஓட்டுனர். நகரம் பெருநகர சந்தையில் இருந்து காய்கனிகளை ஏற்றிக் கொண்டு உதயகுமார் தச்சநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் இருவர் ஆட்டோவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, உதயகுமாரிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மூன்றடைப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (25), சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (36) ஆகிய இருவரை கைது செய்தனர்.