ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட்: சென்னை பள்ளி அணி சாம்பியன்

திருநெல்வேலி சங்கர் நகரில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை டான்போஸ்கோ பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

திருநெல்வேலி சங்கர் நகரில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை டான்போஸ்கோ பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் கிரிக்கெட்டில் திறமையான மாணவர்களை உருவாக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முத்தூட் குழுமம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4 ஆவது முறையாக சங்கர் நகரில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 5 தினங்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 8 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று
விளையாடின.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த சென்னை டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளி அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் சுனில் கிருஷ்ணா அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை ஏ.வி.எம்., ராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்கள் எடுத்தது. டான் போஸ்கோ பள்ளி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் அனீஸ் 6 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி அணிக்கு ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 சாம்பியன் கோப்பையை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.பி.சந்திரசேகர், ஹேமங் பதானி ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com