பாளை.யில் பொங்கல் விழா

பாளை. மகாராஜ நகரில் உள்ள நம்ம ஊரு குளோபல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பாளை. மகாராஜ நகரில் உள்ள நம்ம ஊரு குளோபல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் ராஜாஜி செல்வராஜு தலைமை வகித்தார். பள்ளியின் நிறுவனர் மருத்துவர் சண்முகப்பிரியா, இயக்குநர் மாரி கார்த்திகேயன், செயலர் சிவகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பள்ளிக் குழந்தைகள் மட்டுமன்றி அவர்களுடைய பெற்றோர்களும் விழாவில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பத்மஸ்ரீராஜகோபாலன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
செஞ்சிலுவைச் சங்கம்: பாளையங்கோட்டையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் எம்.சார்லஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மரியசூசை, பொருளாளர் எஸ்.பிரேமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் சிறப்பு விருந்திரனராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்தோருக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை மூத்த ஆயுள் உறுப்பினர் ராஜ்குமார் அருளானந்தம் தொகுத்து வழங்கினார்.
இதேபோல் பாளையங்கோட்டை சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் அல்போன்சா தலைமை வகித்தார். சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத்தின் நிறுவனர் கு.பரமசிவன், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு மைய இயக்குநர் இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ஹெட்சிலீமா அமலினி, மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளர் வெங்கடேஸ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன், நிதிசார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள வி.கே.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, தலைமை ஆசிரியை ஆர்.ஜெயபாரதி தலைமை வகித்தார். பள்ளி நிறுவனரும், முதல்வருமான கே.முத்துக்குமார், செயலர் ஆர்.சின்னதம்பி, பொருளாளர் தளவாய், உறுப்பினர்கள் ராஜேந்திரன், அசோகராஜ், கல்வி ஆலோசகர் ராமலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை சி.குமரிகலா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com