இணையதளம் மூலம் பத்திரப் பதிவு: கணினி மைய உரிமையாளர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இணையதளம் வழியாக பத்திரம் பதிவு செய்தல் குறித்து கணினி மையத்தினருக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இணையதளம் வழியாக பத்திரம் பதிவு செய்தல் குறித்து கணினி மையத்தினருக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பத்திரப் பதிவுத் துறையில் இணையதளம் மூலம் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. முதல்கட்டமாக ஆவண எழுத்தர்கள், கணினி உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கணினி மையம் நடத்துபவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, தென்காசி பதிவு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் கணினி மையங்கள் நடத்துபவர்களுக்கு இணையதளம் வழியாக பத்திரம் பதிவு செய்வது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்திலுள்ள கணினி மைய உரிமையாளர்களுக்கான இப்பயிற்சி முகாம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பயிற்சியை மாவட்டப் பதிவாளர் ச. பாக்கியம் தொடங்கிவைத்தார்.
கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் லெ. ரெங்கராஜன் பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில், பதிவாளர் அலுவலக மேலாளர் வெங்கட்ராமன்,  சங்க ஆய்வாளர் சங்கரநாராயணன், கணினி மையத்தினர் கலந்துகொண்டனர். இதேபோல், தென்காசி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவிலில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com