ஜாக்டோ-ஜியோ ஆலோசனைக் கூட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பால்துரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் சார்லஸ் நீல் ஆகியோர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார்.
தீர்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 24 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜாக்டோ ஜியோ நிதிக் காப்பாளர் கற்பகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com