பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களுக்கு சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 160க்கு முழு டாக்டைம் உள்ளிட்ட சலுகைகள் அளித்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 160க்கு முழு டாக்டைம் உள்ளிட்ட சலுகைகள் அளித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 20 ஆம் தேதி வரை ரூ. 160-க்கு செய்யப்படும் டாப்அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. புதிதாக பிரீபெய்டு சிம் வாங்குவோருக்கும், பிற நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ். என்.எல். எம்.என்.பி. மூலமாக மாறி வரும் வாடிக்கையாளர்களுக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெல்கம் ஆஃபராக 351 எம்.பி. டேட்டாவை 30 நாள்களுக்கு பயன்படுத்தும் வகையில் மார்ச் 31ஆம் தேதி வரை வழங்குகிறது. பிற நெட்வொர்க்கிலிருந்து மாற விரும்புவோர் தங்களது செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமலேயே எம்.என்.பி. மூலமாக நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். அன்லிமிடெட் கால்கள், டேட்டாவுடன் கூடிய பல்வேறு திட்டங்களளை பொதுமக்களின் தேவைக்கேற்ப பி.எஸ்.என்.எல். நிறுவனம் வழங்கி வருகிறது. செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெறும் வகையில் மெகா மேளாவினை நடத்துகிறது.
அதன்படி, வரும் 15 ம் ஆதி (வியாழக்கிழமை) செங்கோட்டை, சங்கர்நகர் ஆகிய தொலைபேசி நிலையங்களிலும், 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேரன்மகாதேவி, வடக்கன்குளம் மற்றும் பனவடலிசத்திரம், 19 ஆம் தேதி (திங்கள்கிழமை) பாவூர்சத்திரம், நான்குனேரி, இட்டமொழி, 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அம்பாசமுத்திரம், செட்டிகுளம், சங்கரன்கோவில் ஆகிய தொலைபேசி நிலையங்களில் மெகா மேளா நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகையினை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com