நெல்லையில் தமுஎகச மாநாடு தொடக்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட 13 ஆவது மாநாடு பாளையங்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட 13 ஆவது மாநாடு பாளையங்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வரகுணன் தலைமை வகித்தார். அகஸ்டின் வரவேற்றார். கரிசல்குயில் கிருஷ்ணசாமி, ப.தண்டபாணி ஆகியோர் பாடல்கள் பாடினர். தாமிரபரணி நாடகக்குழுவினர் நாடகம் நிகழ்த்தினர். சாதி மறுத்து திருமணம் புரிந்த தம்பதிக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் உதயசங்கர் பாராட்டு தெரிவித்தார். படைப்பாளிகள் செ.திவான், ஜோஸப்பின் பாபா, இளங்கோமணி, சோ.அழகு ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் பாராட்டி பேசினார். தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றவர்களை மாவட்ட துணைத் தலைவர் கிருஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பே.ராஜேந்திரன், மருத்துவர் பிரேமச்சந்திரன், கோ.கணபதிசுப்பிரமணியன், பேராசிரியர் கோமதிநாயகம், ஈஸ்வரமூர்த்தி, பக்ருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் சேதுராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்ச்சி வீரமாணிக்கபுரத்தில் உள்ள நவஜீவன் அறக்கட்டளை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. எழுத்தாளர் உதயசங்கர் மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com