ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவது பெற்றோரின் கடமை: மாவட்ட வருவாய் அலுவலர்

ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவது பெற்றோரின் கடமை என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவது பெற்றோரின் கடமை என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதியருக்காண பயிற்சியரங்கை  மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:  
எதிர்கால சந்ததியினரான இன்றைய குழந்தைகளை ஆரோக்கியமான குழந்தைகளாக உருவாக்குவது ஒரு தாயின் கடமை மட்டுமல்ல, தந்தையின் பொறுப்பும்கூட. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் 21 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திலும் திருமணம் முடிந்து 6 மாதம் வரை உள்ள 30 தம்பதியரை தேர்ந்தெடுத்து இந்த பயிற்சியரங்கம் நடத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுத்தல், மருத்துவ பரிசோதனை, தடுப்பூசி போடுதல், நல்ல ஓய்வு போன்றவற்றை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பதும்,  குழந்தையை முறையாக வளர்ப்பதற்கு தேவையான ஒத்துழைப்பு அளிப்பதும் ஒரு கணவனுடைய மிகப்பெரிய கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றினால்தான் அந்தப் பெண்ணால் ஆரோக்கியமான அறிவுள்ள குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க முடியும்.
இதனை புதுமண தம்பதியினருக்கு நன்கு உணர்த்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். அது மட்டுமின்றி குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு அளிக்க வேண்டிய பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்காண உணவூட்டும் முறைகள், கவனிப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமாகும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com