நாளை காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (அக்.15)  நடைபெறுகிறது.

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (அக்.15)  நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கே. சங்கரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், வட்டார, மண்டல நிர்வாகிகள், கிராம கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் கொக்கிரகுளம் ரோஸ் மஹால் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், அகில இந்திய செயலரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார். கட்சியினர் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com