குற்றாலத்தில் தென்னிந்திய எலெக்ட்ரோபதி மருத்துவ மாநாடு

தென்னிந்திய எலெக்ட்ரோபதி மருத்துவ மாநாடு குற்றாலத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.

தென்னிந்திய எலெக்ட்ரோபதி மருத்துவ மாநாடு குற்றாலத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தெலங்கானா, கர்நாடகம், கேரளம், தமிழகத்தைச் சேர்ந்த எலெக்ட்ரோபதி மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில், தென்னிந்திய சங்கத் தலைவராக டாக்டர் வி. பாரத், செயலராக ஆரோக்கியபழம், துணைத் தலைவராக கே. சேதுசுப்பிரமணியன், பொருளாளராக பி. திருக்குமரன், இணைச் செயலராக லக்ஷ்யா பாரத், பொதுக்குழு உறுப்பினர்களாக கே. குமரன், இ. ஏகலைவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கர்நாடக கிளை தலைவராக எச்.எஸ். பத்மராஜூ, செயலராக டாக்டர் ஸ்ரீகாந்த்பித்லு, துணைத் தலைவராக ஹரிஷ்குமார், உதவி துணைத் தலைவராக ஜெகதீஷா ஜோகி, பொருளாளராக ஜஸ்வந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பக்கவிளைவுகள் அற்ற, விரைவில் குணம் தரக்கூடிய இந்த மருத்துவமுறை குறித்து தென்னிந்தியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இங்கு கிடைக்கக்கூடிய 65 சதவீத மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com