சபரிமலை விவகாரம்: நீதிமன்றம் மூலம் பரிகாரம் காணமுயற்சிக்க வேண்டும்

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி முகவர்கள் நியமன பணி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் ஊழல்கள், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி அமைக்க பல கட்சிகள் முன்வருகின்றன. மக்கள் நீதி மய்யம், பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளன. மறைமுகமாக சில கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. சபரிமலை கோயிலுக்கு என்று சில ஆகம விதிகளும், சம்பிரதாயங்களும், நம்பிக்கையும் உள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட கோயில் நிர்வாகத்தினர், இந்துத்துவா அமைப்பினர், ஆன்மிகவாதிகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதனை தவிர்த்து கோயிலுக்கு செல்லும் பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. சபரிமலை, முல்லைப் பெரியாறு என எந்த வழக்காக இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பின் மீது மாறுபாடு உள்ளவர்கள் நீதிமன்றத்தின் மூலம்  பரிகாரம் காண முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com