தாமிரவருணி ஆரத்தி பாடல் வெளியீடு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டப படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரத்தி பூஜை நடைபெற்றது. 
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள், வேலூர் பொற்கோயில் சக்திபீடம் நாராயணி அம்மா, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்பவழகிய தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடும், நவீன தாமிரபரணி மகாத்மியம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. திருமுறை கலாநிதி திருத்தணி சுவாமிநாதன், மயிலம் பொம்மபுர ஆதீனம் திருப்பாதிரி புலியூர் ஞானியார் மடம் சுவாமிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஜி. மாசானமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com