நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: சேர்வலாறு அணையின் நீர்மட்டம்  100 அடியை தாண்டியது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2 வாரத்தில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82 அடி உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 102 அடியாக இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அடுத்த சில தினங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இரவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-7, பாபநாசம் கீழ்அணை-12, சேர்வலாறு அணை-2, மணிமுத்தாறு அணை-53, கருப்பாநதி அணை-14, குண்டாறு அணை-20, அடவி நயினார் அணை-20, கொடுமுடியாறு அணை-20, கன்னடியன் அணைக்கட்டு-47.2, அம்பாசமுத்திரம்-46, சேரன்மகாதேவி-20, ஆய்க்குடி-10.2, சிவகிரி- 42, சங்கரன்கோவில்-31, செங்கோட்டை-8, தென்காசி-10.8, ராதாபுரம்-16, நான்குனேரியில் அதிகபட்சம்-85, பாளையங்கோட்டை-5.2, திருநெல்வேலி-2.
மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து கடந்த 6 ஆம் தேதி 19.68 அடியாக இருந்தது. இதனிடையே, கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 வாரத்தில் 82 அடி உயர்ந்து 102 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பிற அணைகளின் நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணை 98.35 அடி, மணிமுத்தாறு அணை 84.50 அடி, கடனாநதி அணை 65 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 60 அடி, கருப்பாநதி அணை 67.59 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 1.50 அடி உயர்ந்து 90.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை 20.50 அடி, நம்பியாறு அணை 21.91 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 23 அடியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com