"அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்கலாம்'

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டியில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டியில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.சாந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடிதம் எழுதலாம். அனைத்து வயதினரும் போட்டியில் பங்கேற்கலாம்.
18 வயதுக்குள்பட்டவர்களுக்கு லெட்டர் பிரிவு, என்வலப் பிரிவு எனவும், 18 வயது தாண்டியவர்களுக்கு இன்லேன்ட் லட்டர் பிரிவு, என்வலப் பிரிவு என 4 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.
என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத்தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லேண்ட் லெட்டர் பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும். 
அஞ்சலகங்களில் விற்கப்படும் கடித உறை அல்லது வேறு உறைகளில் தேவையான அளவு அஞ்சல் தலை ஒட்டியவை மற்றும் இன்லென்ட் கார்டுகள் மட்டுமே ஏற்கப்படும். 
கடிதங்களின் மேல் (1-1-2018 அன்று என் வயது 18 வயதுக்கு மேல், 18 வயதுக்கு கீழ் என சான்றளிக்கிறேன்) என்ற வாசகத்தை எழுதிக் கையெழுத்திட வேண்டும். கடிதங்களை தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் பெட்டியில் போட வேண்டும். சிறு கிராமங்களில் அஞ்சல் அதிகாரியிடம் கொடுக்கலாம். பொதுவான அஞ்சல் பெட்டிகளில் போடக் கூடாது. கடிதங்களை அனுப்ப இம் மாதம் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.
கடிதங்களில் பெறுநர் முகவரியில் முதன்மை அஞ்சல் துறைத் தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600 002 என்ற முகவரியை எழுத வேண்டும். போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கடைசி தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com