டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூய்மைப் பணி: ஆட்சியர் அறிவுறுத்தல்

டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் களப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் களப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடும் டெங்கு தடுப்பு களப் பணியாளர்களை நேரில் அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் கூறியதாவது: குடிநீர்த் தொட்டிகள், குழாயடிகள் போன்றவற்றை ஆய்வு செய்து குளோரின் மருந்திட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்செரிக்கை பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும்.
டெங்குவால் சிறு பாதிப்புகூட ஏற்படாத வகையில் தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்புகள், கொசு வளரும் சூழல்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இல்லங்களையும், சுற்றுப்புற வளாகத்தையும் தூய்மையாக வைத்திட ஆலோசனை வழங்க வேண்டும் என்றார். 
பின்னர், கலைநிகழ்ச்சிகள் மூலம் வீதி வீதியாக டெங்கு தடுப்பு பிரசாரம்  நடத்தவுள்ள வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். புனித தோமையர் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சுமித்ரா, மகேஸ்வரி, சுஜா ஆகியோருக்கு பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தமைக்காக பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயண நாயர், மாநகர அலுவலர் சதீஷ்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் அரசகுமார், சாகுல் ஹமீது,  முருகேசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com