தாமிரவருணி நதி விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியீடு

தாமிரவருணி நதியின் பெருமை, நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாமிரவருணி நதியின் பெருமை, நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஆவணப்படம் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீட் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் 40 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "நீர் நதி உயிர்' எனும் இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கு, அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. அகிலாண்டம் தலைமை வகித்தார். நதி குறித்த விழிப்புணர்வு பாடலை மகாராஜநகர் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பாடினர். திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி ஆவணப்படத்தை வெளியிட, சமூக ஆர்வலர்கள் பெற்றுக்கொண்டனர். 
அரசு மருத்துவமனை முதன்மையர் எஸ்.எம். கண்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜி. பரமசிவன், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி, சமூக ஆர்வலர்கள் நல்லபெருமாள், நடராஜன், ராம்குமார், பூதலிங்கம்,  வழக்குரைஞர் ஆறுமுகம், சு. செல்லப்பா, அரிமா சங்கம் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com