மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலையை சீரமைக்கக் கோரி மனு

மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாஞ்சோலை மக்கள் நலச்சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி பகுதிகளில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களது உறவினர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் சென்று வரும் மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு அருவி வரையிலான சுமார் 6 கி.மீ. சாலையைச் சீரமைக்க ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறை மூலம் நிதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஆனால், அதன்பிறகு, சாலையை சீரமைக்க எவ்வித பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை. சேதமடைந்த சாலையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மணிமுத்தாறு-மாஞ்சோலை இடையேயான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com