ராணி அண்ணா கல்லூரியில் புதிய கட்டடங்கள் திறப்பு

ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில், புதிய வகுப்பறை மற்றும் கழிவறை கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில், புதிய வகுப்பறை மற்றும் கழிவறை கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பழையபேட்டையில் உள்ள இக் கல்லூரியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், இந்திய எண்ணெய் கழகத்தின் (ஐஓசி) சார்பில் ரூ.19 லட்சம் மதிப்பிலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ.15.5 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட கழிவறை கட்டடங்களை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன முதுநிலை மேலாளர் வர்கீஷ்,  இந்திய எண்ணெய் கழக மண்டல பொது மேலாளர்கள் மதுரை முரளி,  திருநெல்வேலி ஷீனா, அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com