தாமிரவருணி ஆற்றில் விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதையடுத்து


திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதையடுத்து மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 498 விநாயகர் சிலைகள் முறையான அனுமதி பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருநெல்வேலி உள்கோட்டத்தில் 32 சிலைகள், பாளையங்கோட்டை உள்கோட்டத்தில் 21 சிலைகள் என 53 சிலைகள் அனுமதி பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
பாளையங்கோட்டையில் 18 சிலைகள், மேலப்பாளையத்தில் 3 சிலைகள், திருநெல்வேலி சந்திப்பில் 3 சிலைகள், திருநெல்வேலி நகரத்தில் 18 சிலைகள், தச்சநல்லுôரில் 2 சிலைகள், பேட்டையில் 9 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்து முன்னணி சார்பில் மாநகர் மாவட்ட பகுதிகளில் 82 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இரவு செங்கோட்டையில் விநாயகர் சிலை பிரதிஷ்டைக்காக ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில் திடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 7 அடி உயர விநாயகர் சிலை மற்றும் வீட்டில் வைத்து பூஜிக்கப்பட்ட 110 சிறிய விநாயகர் சிலைகள் என மொத்தம் 111 சிலைகள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சனிக்கிழமை மாலையில் கொண்டு செல்லப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விநாயகர் சிலைகள் இரவில் கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதேபோல் கடையநல்லுôர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 75 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று ஊர்வலம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.16) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வண்ணார்பேட்டை தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
இதுதவிர சுற்றுப்பகுதி கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
ஊர்வலத்தில் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com