பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ப.முருகானந்தம்வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். தனது 2ஜி மற்றும் 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு ரூ.160- க்கு செய்யப்படும் டாப் அப்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.16) ஒரு நாள் மட்டும் முழு டாக்டைம் வழங்குகிறது. இச்சலுகை சி டாப் அப், மொபைல் வாலட் மற்றும் வெப் போர்ட்டல் மூலம் செய்யப்படும் டாப் அப்களுக்கு பொருந்தும். ரூ.30- க்கு பேப்பர் வவுச்சர் மூலம் செய்யப்படும் டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது. இச்சலுகை அக்டோபர் 11 வரை மட்டுமே. இச்சலுகை சி டாப் அப் மற்றும் வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப் அப் களுக்குப் பொருந்தாது. பி.எஸ்.என்.எல். 3ஜி சேவை அம்பாசமுத்திரம் கோட்டத்தில் பாப்பான்குளம், பாப்பாக்குடி, தென்காசி கோட்டத்தில் சொக்கம்பட்டி பகுதிகளில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
பிபிஜி கோம்போ யு.எல்.டி 150 ஜிபி பிராண்ட்பேண்ட் திட்டம்: பொதுமக்களின் வசதிக்காக தினமும் பிராட்பேண்ட் மூலமாக 5ஜிபி அன்லிமிடெட் டேட்டா மற்றும் 24 மணிநேர அன்லிமிடெட் கால்கள் நாட்டிலுள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. பிபிஜி காம்போ யுஎல்டி 150ஜிபி பிளானில் (ரூ199 + ஜி.எஸ்.டி) 20 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தில் தினசரி 5 ஜிபி டேட்டாவும், அதற்குப் பின்னர் 1எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 24 மணி நேர அன்லிமிடெட் கால்களும் கிடைக்கும்.
கட்டணம் தள்ளுபடி : புதிய தரைவழி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு அமைப்புகட்டணம் முறையே ரூ. 600 மற்றும் ரூ.850 முற்றிலும் தள்ளுபடி. இச்சலுகை அக்டோபர் 21 வரை மட்டுமே. மறு இணைப்பு பெறும் பொதுமக்களுக்கும் இச்சலுகை உண்டு. சுட்டுரை, முகநூல் மூலமாக தரைவழி, பிராட்பேண்ட் மற்றும் எப்.டி.டி.எச். இணைப்பை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகை தள்ளுபடி சலுகை அக்டோபர் 29 வரை மட்டுமே.
மேளா: பி.எஸ்.என்.எல்.லின் மேற்கண்ட சலுகைகளை பெறுவதற்காக பி.எஸ்.என்.எல். வரும் 19 , 26-ஆம் தேதிகளில் அனைத்து தொலைபேசி நிலையங்களிலும் மெகா மேளாக்களை நடத்துகிறது. 17-ஆம் தேதி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, புளியங்குடி, கடையநல்லுர் தொலைபேசி நிலையங்களிலும், 18-ஆம் தேதி சங்கரன்கோவில் தொலைபேசி நிலையத்திலும், 20-ஆம் தேதி செங்கோட்டை தொலைபேசி நிலையத்திலும், 22-ஆம் தேதி பாளையங்கோட்டை அன்பு நகர் மற்றும் வடக்கன்குளம் தொலைபேசி நிலையங்களிலும் உள்ளூர் மேளா நடைபெறுகிறது. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இந்த மேளாக்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com