மகிளா காங்கிரஸ் கொடி அறிமுகம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியில் மகிளா காங்கிரஸுக்கு தனிக் கொடியை அதன் தலைவர் ராகுல் காந்தி அறிமுகம் செய்துள்ளார். அந்தக் கொடியின் அறிமுக விழா மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மகிளா காங்கிரஸ் கொடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய கொடியை மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் லைலா ரவிசங்கர் அறிமுகம் செய்தார். மண்டல பொதுச் செயலர் பிரபாரதி, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மாரியம்மாள், மேற்கு மாவட்டத் தலைவர் நாகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் காந்திமதி, சண்முகத்தாய், மல்லிகா, கஸ்தூரி, மாவட்ட பொருளாளர் ராஜேஸ் முருகன், பொதுச் செயலர் சொக்கலிங்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com