கழிவு நீரோடையை சீரமைக்க வலியுறுத்தல்

மழைக்கு முன்பு கழிவு நீரோடையை தூர்வார வேண்டும் என பசுமை மேலப்பாளையம் திட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மழைக்கு முன்பு கழிவு நீரோடையை தூர்வார வேண்டும் என பசுமை மேலப்பாளையம் திட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பசுமை மேலப்பாளையம் திட்டக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு, செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் சலீம் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். அப்துல்கரீம் பங்கேற்றுப் பேசினார். 
புதிய நிர்வாகிகள் தேர்வில், தலைவராக அப்துல்காதர், செயலராக பக்கீர் முகம்மது லெப்பை, பொருளாளராக சலீம், செயற்குழு உறுப்பினர்களாக யூசுப் ரஹ்மான், அல்தாப், ரசூல், இம்ரான், அப்துல் ரசூல், சுல்தான், ஜமால், இத்ரீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: மேத்தமார்பாளையம் 3, 4 ஆவது தெருக்களுக்கு இடையே ஆசாத் சாலையில் அடிக்கடி நேரும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், திறந்தநிலை கழிவுநீரோடை மீது மூடிகள் அமைக்க வேண்டும். மேலப்பாளையம் மண்டலத்தில் 31-38 ஆவது வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பாக, மேலப்பாளையம் பகுதியில் தூர்ந்து காணப்படும் கழிவுநீரோடையை முழுமையாக சீரமைக்க வேண்டும். ஆயிஷாநகரில் கிடப்பில்போடப்பட்ட வாறுகால் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com