தூத்துக்குடியில் நீதித்துறை நடுவர் மன்ற அலுவலகம் திறப்பு: உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 ஆவது நீதித்துறை நடுவர் மன்ற அலுவலகத் திறப்பு விழா, ரூ.5

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 ஆவது நீதித்துறை நடுவர் மன்ற அலுவலகத் திறப்பு விழா, ரூ.5 கோடியில் அமையவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா பேசியதாவது:
ஐந்தாண்டுகளுக்கு மேலாக தேங்கிக் கிடக்கும் ஏராளமானவழக்குகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் மகளிர் நீதிமன்றம், தீண்டாமை ஒழிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வர உள்ளன.
நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு நீதிமன்றமும், வழக்குரைஞர்களும் மட்டுமே காரணம் அல்ல. நீதித் துறைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுக்காததும் ஒரு காரணம் ஆகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பாஸ்கரன்,எஸ்.எஸ்.சுந்தர், மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி என். நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com