தூய்மை தூத்துக்குடி திட்டம்: ஒரே நாளில் 320 டன் குப்பைகள் சேகரிப்பு

தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் 320 டன் அளவுக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் 320 டன் அளவுக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட தூய்மை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் மாதத்தில் ஒருநாள் தீவிர தூய்மைப் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த பணிக்கான தொடக்க விழா சனிக்கிழமை சின்னமணிநகரில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார்-ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள், தன்னார்வத் தொண்டர்கள், மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தேசிய கடற்படை பிரிவு மாணவர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குள்பட்ட தபால்தந்தி காலனி, மடத்தூர், அண்ணாநகர், சிதம்பரநகர், சுப்பையாபுரம் உள்ளிட்ட 63 இடங்களில் நடைபெற்ற இப்பணியில் சுமார் 4,500 பேர் ஈடுபட்டனர். ஒரே நாளில் 320 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மூலமாக குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியின்போது, மாநகராட்சி பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது.
மேலும், மாநகரில் குப்பைகளை பிரித்து வழங்கிய பொதுமக்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி, சண்முகராஜ் ஆகியோருக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com