பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி: மணப்பாடு பள்ளி சிறப்பிடம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 109ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மணப்பாடு பள்ளி

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 109ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் மணப்பாடு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். இதில், மணப்பாடு புனித வளன் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் பிரகாஷ் முதலிடம் பெற்றார்.அவருக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் இருதயராஜ், தலைமையாசிரியர் மனோகர் சாமுவேல்ராஜ், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com