தச்சமொழி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

சாத்தான்குளம் தச்சமொழி சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கிசனிக்கிழமை வரை  3 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம் தச்சமொழி சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கிசனிக்கிழமை வரை  3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளில் உவரி சுயம்புலிலிங்க சுவாமி கோயிலிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்,  இரவு 8 மணிக்கு சுவாமிக்கு மாக்காப்பு  அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை  காலை 9 மணிக்கு தெய்வீக பக்திபாடல் நிகழ்ச்சி, 10 மணிக்கு சிறப்பு  அபிஷேகம், தீபாராதனை, 11மணிக்கு பொங்கலிலிடுதல், 12 மணிக்கு மதியக்கொடை, தொடர்ந்து சுடலை மாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு  அலங்காரங்களுடன் பூஜை, 1 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராடுதல்,  மாலை 6 மணிக்கு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு  அலங்காரங்களுடன் சிறப்பு பூஜை,  12 மணிக்கு ஜாமக்கொடை,  தீபாராதனை நடைபெற்றது.
3ஆம் நாள் சனிக்கிழமை  மதியம் சுவாமி உணவெடுத்தல், மாலை  சிறுவர் சிறுமிகளுக்கானவிளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது.
எற்பாடுகளை கோயில் விழா கமிட்டித் தலைவர் க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com