பாஜக ஆலோசனைக் கூட்டம்

உடன்குடி ஒன்றிய, நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய, நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜெயம் செல்வராஜ், நகரத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட விவசாய அணிச் செயலர் செந்தூர்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம், பொன்இசக்கி, ஒன்றிய அமை ப்புச் செயலர்கள் அழகேசன்,சிவந்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலர் ரா. சிவமுருக ஆதித்தன் ஆகியோர் பேசினார்கள்.
இதில், உடன்குடி ஒன்றி ய பாஜக துணைத் தலைவர் சங்கரகுமார் ஐயன், மாவட்ட இளைஞரணிச் செயலர் அய்யப்பன், ஒன்றிய இ ளைஞரணித் தலைவர் சதீஷ், நகர இளைஞரணித் தலைவர் முத்துராஜன், மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் சங்கர், ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, ஒன்றிய  மகளிரணித் தலைவி புஷ்பக்கனி உள்பட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com