"மாணவர் விடுதிகளில் பணிபுரிய விரும்பும் துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் 100 மாணவ, மாணவியருக்குகுறைவாக உள்ள விடுதிகளில் பகுதிநேர துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் 18 ஆண் பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களும், 13 பெண் பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களும் ரூ. 2,000 தொகுப்பூதிய அடிப்படையில் நேர்காணல் மூலம் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
இனசுழற்சி விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம். 8 ஆம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருக்கவேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 3 கி.மீ.க்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். விடுதி அமைந்துள்ள இடத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள இனசுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் குறித்த விவரங்களுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com