ஆத்தூர், குரும்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் குழு ஆய்வு

குரும்பூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை வியாழக்கிழமை சந்தித்து  விவரம் சேகரித்தனர்.

குரும்பூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளை வியாழக்கிழமை சந்தித்து  விவரம் சேகரித்தனர்.

குரும்பூர் சுகந்தலை, வெள்ளக்கோயில், மரந்தலை, ஆத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒக்கி புயலால் 5 லட்சம் வாழைமரங்கள் சேதமாகின.    இதனை முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.அப்பாத்துரை தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அய்யாசாமி, ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் எஸ்.நல்லையா, ஏஐஒய்எப் மாநிலச் செயலர் பாலமுருகன், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் வெள்ளசாமி, ஆத்தூர் நகரச் செயலர்  மணிமுத்து, மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, துணைச் செயலர் கோவிந்தன், ராஜா, ராஜலிங்கம், பாண்டி,ஒன்றிய துணைச் செயலர் சீனிவாசன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழைகளை பார்வையிட்டும்,   பாதிப்புக்குள்ளான விவசாயிகளையும் சந்தித்தும்  விவரங்களை கேட்டறிந்தனர்.
இதுகுறித்த விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கும்,  தமிழக அரசுக்கும்  அறிக்கையாக அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com