திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரத்தில் மாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்கழி மாதம்  டிச. 16ஆம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13இல் நிறைவடைகிறது. மார்கழி மாதத்தில் கோயில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 - 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7.00 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
முக்கிய விழா நாள்களான  ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 2ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு  அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 14ஆம் தேதி  தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும் கோயில்  நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com