தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை

நிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
 இதுகுறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம்-1 இல் இருந்து புதன்கிழமை ஒரே நாளில் எம்.வி ஏஸியன் சாம்பியன் என்ற கப்பலில் இருந்து 36,526 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 
  இதற்கு முன்பு வடக்கு சரக்கு தளம்-1 இல் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி எம்.வி டென்டன்ஸ் என்ற கப்பலில் இருந்து 35,656 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரி கையாளப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com