வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ. 95 கோடியில் நல உதவிகள் அளிப்பு: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 2,732 பேருக்கு ரூ. 95.59 கோடி மதிப்பிலான அரசின் மானிய உதவித்தொகையுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 947 விவசாயிகளுக்கு ரூ. 3.17 கோடி மானியத்தில் 947 வேளாண்மை இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 4 வேளாண் குழுக்களுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், ரோட்டவேட்டர் போன்ற இயந்திரங்கள், கருவிகள் என 48 விவசாயிகளுக்கு ரூ. 18.85 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ. 82.55 லட்சம் செலவில் 69 பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் கிராம குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை இயந்திரமாக்குதல் உபஇயக்கம் திட்டத்தின்கீழ் 33 விவசாயிகளுக்கு ரூ. 16.71 லட்சம் மானியத்தில் உழுவை இயந்திரங்கள், ரோட்டவேட்டர், களை எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
9 வேளாண் குழுக்களுக்கு, ரூ. 90 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் வழங்கும் திட்டத்தின் மூலம் 23 பயனாளிகளின் நிலத்தில் ரூ. 55.68 லட்சம் மானியத்தில் சூரிய ஒளி மோட்டார்கள் நிறுவப்பட்டன. சூரிய கூடார உலர்த்தி ரூ. 12.50 லட்சம் மானியத்தில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின்கீழ் 11 விவசாயிகளுக்கு ரூ. 5.77 லட்சம் மதிப்பீட்டில், பண்ணைக்குட்டைகள் மற்றும் 146 நிலத்தடி நீர் செறிவூட்டும் குழாய்கள் ரூ. 86.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com