ஜன. 6இல் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடியில் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுப் போட்டிகள் 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், பளு தூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், கபடி மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. 7ஆம் தேதி சைக்கிளிங், கூடைப்பந்து, ரெஸ்லிங், ஜிம்னாஸ்டிக், கோ-கோ, கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, வில் வித்தை மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுகளுக்குத் தேர்வு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொள்பவர்கள் 1.1.2003 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும். 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொள்வோர் 1.1.2000 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், கபடி மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறுகிறவர்களுக்கு ரூ. 350-ம், இரண்டாம் இடம் பெறுகிறவர்களுக்கு ரூ. 250-ம், மூன்றாமிடம் பெறுகிறவர்களுக்கு ரூ. 150-ம் வழங்கப்படும்.
பரிசுத் தொகை சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வருவோர் வயதுக்கான சான்றிதழை, பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று வரவேண்டும். மேலும், தங்களது வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் போன்றவை உடன் எடுத்துவர வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் நகலை எடுத்துவர வேண்டும்.
போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் தகுதியுடைய வீரர், வீராங்கனைகள் போட்டிகள் நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்குக்கு நேரில் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com