ஆறுமுகனேரி ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் 11 இல் ஆருத்ரா தரிசனம்

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி 11ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி 11ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
 திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட இக் கோயிலில் திருவாதிரை விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீமாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருவெம்பாவை பாடி தீபாராதனைகளும்,  ஸ்ரீமாணிக்க வாசகர் கிரிவீதி உலாவும் நடைபெற்றது. இதே போன்று 11ஆம் தேதி வரை பத்து நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
11ஆம் தேதி திருவாதிரை திருவிழா தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீநடராஜருக்கும், ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கும், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் காரைக்கால் அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பின்னர் திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை,காலசந்தி பூஜை முதலியன நடைபெறும்.
தொடர்ந்து கோ பூஜை,களி நிவேதனம்,கருப்பு இரட்சை, ஸ்ரீநடராஜருக்கு தாண்டவ தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் திருவெம்பாவை பாடி தீபாராதனையும்,பஞ்சபுராணம் பாடுதலும் நடைபெறும். தொடர்ந்து ஸ்ரீநடராஜர் கோயில் பிரகார கிரி வீதி வலம் வருதல் நடைபெறுகிறது. லெட்சுமிமாநகரம் ஸ்ரீநடராஜர தேவார பக்த பஜனை  ஆலயத்தில்  திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதனையொட்டி  திருவெம்பாவை பாடி சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தினசரி இரவு பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. 9 ஆவது திருநாளான ஜன.10 ஆம் தேதி பகலில் சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. அன்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீமாணிக்கவாசகர் சுவாமி சப்பரங்கள்  கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பத்தாம் திருநாளான ஜன. 11ஆம் தேதி காலை கோயிலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து திருவெம்பாவை பாடி வழிபாடு நடைபெறும்.
இதே போன்று சைவ வேளாளர் சித்தாந்த சங்கத்தின் சார்பில் திருவாதிரை திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை முதல் தினமும் இரவு திருவெம்பாவை பாடி, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 11ஆம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நடராஜர் சப்பர பவனி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com