தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் விரைவில் நிறுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
 இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 662 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 211 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. 68 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதால் நீர்நிலைகள் நிரம்பவில்லை. இதனால் வறட்சி காணப்படுகிறது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 லட்சத்து 443 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது. தற்போது 60 சதவீதம் வேட்டி, சேலைகள் வரப்பெற்றுள்ளது. அரசாணை வந்ததும் ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
 இம்மாவட்டத்தில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாமிரவருணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விரைவில் முழுமையாக நிறுத்தப்படும்.
 முழு சுகாதாரத் திட்டத்தில் தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 2015 இல் 146 கிராமங்கள் முழு சுகாதார கிராமமாக மாற்றப்பட்டது. 2016-இல் மேலும் 73 கிராமங்கள் சுகாதார கிராமமாக மாற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.
  தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் செயற்கைகால் மற்றும் சக்கர நாற்காலியும், ஆதிதிராவிடர் துறை மூலம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பணி ஆணையையும் ஆட்சியர் ம.ரவிகுமார் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com