ஆறுமுகனேரியில் குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

ஆறுமுகனேரியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆறுமுகனேரியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆறுமுகனேரி பேரூராட்சியில் 12 குடிநீர்த் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வழங்கப்பட்டு வருகிறது.  ஆரம்ப காலத்தில் குடிநீர் தினசரி இரு முறை வழங்கப்பட்டது. மக்கள்தொகை அதிகரித்ததன் காரணமாக தினசரி ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது, நான்கு தினங்களுக்கு ஒருமுறை என்ற நிலையில் பொதுமக்களை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில், மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு விநியோகிக்கும் குழாய்களில்தான் தெரு குழாய் அமைத்து குடிநீர் வழங்கவேண்டும்.
இதற்கு மாறாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில், ஆற்றிலிருந்து மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டும் செல்லும் குழாய்களில் துளையிட்டு குடிநீர் ஏற்றும் நேரங்களில் நீர் கிடைக்குமாறு குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மேல்நிலைத் தொட்டிகளுக்கே குடிநீர் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர வீட்டு குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுகின்றனர். இதனால்  குடிநீர் சீராக கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் இந்த இருமுறைகளையும் ஒழுங்குபடுத்தி சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com