குறுக்குச்சாலையில் பயிர்க் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலையில், வேளாண்மைத் துறை, பாண்டியன் கிராம வங்கி, ஓட்டப்பிடாரம் வட்டார விவசாய விளைபொருள்கள்

தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலையில், வேளாண்மைத் துறை, பாண்டியன் கிராம வங்கி, ஓட்டப்பிடாரம் வட்டார விவசாய விளைபொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை வங்கியின் மண்டல மேலாளர் சுப்பையா தொடங்கிவைத்தார். தொடர்ந்து,  மு. சண்முகபுரம், கொல்லம்பரம்பு, சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையை வங்கி அலுவலர்களிடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர்.
முகாமில், உதவி வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி, குறுக்குச்சாலை பாண்டியன் கிராம வங்கி மேலாளர் ஆ. சரண்யா, வங்கியின் நிதிசார் கல்விமைய அலுவலர் ஏ. கார்த்திகேயன், ஓட்டப்பிடாரம் வட்டார விவசாய விளைபொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலர் சண்முக மல்லுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com