செவிலியர் பணி: தகுதியுடையோர் ஜன. 9-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகம் வர அழைப்பு

கிராம சுகாதார செவிலியர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதால், தகுதியுடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சுகாதார செவிலியர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதால், தகுதியுடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் பதிவுமூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கான கல்வித்தகுதியாக அரசு பயிற்சி நிறுவனங்களில் 18 மாத அன்ஷ்ண்ப்ஹழ்ஹ் சன்ழ்ள்ங் ஙண்க்ஜ்ண்ச்ங் -க்கான சான்றிதழ் பெற்று இந்திய நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
இதுதவிர, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஙன்ப்ற்ண்ல்ன்ழ்ல்ர்ள்ங் ஏங்ஹப்ற்ட் ரர்ழ்ந்ங்ழ்ள்)  சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். இந்த கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் மட்டும் ஜன.9ஆம் தேதிக்குள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல்தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com