வேளாண் கருவிகள் வாடகை மையம் திறப்பு

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
உயர் தொழில்நுட்பத்துடன் உயர் திறனுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளை வாடகைக்கு அமைக்க முன்வரும் தொழில் முனைவோர், விவசாய சங்கங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.  இதன்படி, ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி வாடகை மையம் அமைப்பதற்கு அதிகபட்ச மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் 13 வாடகை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட பொட்டல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாடகை மையத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.  சிவகளையைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், தொழில் முனைவோருமான அருணாசலம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வாடகை மையத்தை, வேளாண்மை பொறியியல் துறை  கண்காணிப்பு பொறியாளர் பாலசந்திரன் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைச்செல்வன், உதவி செயற் பொறியாளர் ஜாகீர் உசேன், இளநிலைப் பொறியாளர்கள் வெள்ளைச்சாமி, சண்முகம், டிஎம்பி வங்கி பண்டாரவிளை கிளை மேலாளர் சரவணன், பாண்டியன் வங்கி சிவகளை கிளை மேலாளர் ராஜா, விவசாய சங்கத் தலைவர் மதிவாணன், ஊராட்சி முன்னாள் தலைவர் ஜட்சன், சிவகளை விவசாய சங்கச் செயலர் வீரமுத்து, முன்னோடி விவசாயிகள் மாங்கொட்டாபுரம் ராஜேந்திரன், பொட்டல் சம்பத், செல்வராஜ், சாமியாத்து அண்ணாதுரை, பொட்டல் ஊராட்சி எழுத்தர் கொத்தாளமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com