காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தை மணக்கரை கிராம மக்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தை மணக்கரை கிராம மக்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் பேச்சிமுத்து என்ற பாயாசப் பேச்சி (40). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். 25.05.15இல் கீழபுத்தனேரி சுடலைக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பேச்சிமுத்து உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனிடையே அவர் தலைமறைவானாராம். இந்நிலையில், அவரை திருப்பூரில் போலீஸார் புதன்கிழமை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக, மணக்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் வதந்தி பரவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பேச்சிமுத்து உறவினர்கள் முறப்பநாடு காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். நோதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை மாநில துணைத் தலைவர் இசக்கிராஜ், பார்வர்டு பிளாக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மணக்கரை முன்னாள் ஊராட்சித் தலைவர் நம்பிராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com