தூத்துக்குடியில் நாளை விழிப்புணர்வு மினி மாரத்தான்

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் தூய்மை பாரத விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில் தூய்மை பாரத விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.
 இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில்,  தூய்மையான பாரதம் குறித்த விழிப்புணர்வு நெடுந்தூர (மினி மாரத்தான்) ஓட்டப்பந்தயம் ஜனவரி 8 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் பத்திரிகையாளர்கள் என நான்கு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
 தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பிருந்து ஓட்டம் தொடங்குகிறது. போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 இடம் வகிப்போருக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
 போட்டியில் பங்கேற்க விரும்புவோர் எல்ஐசி அலுவலக எதிர்புறம், கடற்கரை சாலையிலுள்ள வஉசி துறைமுக சரக்கு கையாளும் பிரிவு சமுதாய கூடத்தில் சனிக்கிழமை (ஜன. 7)  இரவு 8 மணிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். அப்போதே, துறைமுக மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்றிதழும் பெற வேண்டும். பெயர் பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே எண் கொடுக்கப்படும்.
வெளியூர்களில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெயர் பதிவு செய்த போட்டியாளர்களுக்கு 8 ஆம் தேதி காலை 6 மணி வரை பழைய துறைமுகத்தில் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com