"வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற வாய்ப்பு'

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டத்தில் ஒரு நபர் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெற முடியும். ஏற்கெனவே பயனடைந்தவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற இயலாது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், 5 ஆண்டுகள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு,(31.12.2011-க்கு முன் பதிவு), ரூ.50,000-க்குள் ஆண்டு வருமானம், பதிவை தொடர்ந்து புதுப்பித்திருத்தல் போன்ற தகுதிகள் அவசியம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும்,  பட்டியலினத்தவர்களுக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிக்கு ஏற்ப ரூ.600, ரூ.750, ரூ.1000 என 3 பிரிவுகளில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
 தகுதியுடையோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், மாற்றுத்திறனாளிகள் எனில் அதற்கான அடையாள அட்டை நகல் மற்றும் அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் ஆசிரியர் காலனி, முதல்தெரு (கிழக்கு) பாண்டியன் கிராம வங்கியின் பின்புறம், தூத்துக்குடி என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் உடனடியாக ஆஜராக வேண்டும். தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com