கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க விழாவுக்கு, கல்லூரிச் செயலர் அருள்தந்தை அமலதாஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அமலஜெயராயன், கல்லூரி கணினித் துறைத் தலைவர் ஜோசப் சார்லஸ், கணிதத் துறைத் தலைவர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கண்காட்சியில் தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறை சார்ந்த 40 வகையான புதிய அறிவியல் படைப்புகளையும், தொல்லியல் பொருள்கள், பழங்கால நாணயங்கள், பாரம்பரிய கலைப் பொருள்கள் உள்ளிட்டவைகளையும் மாணவ, மாணவியர் இடம் பெறச் செய்திருந்தனர். சுற்றுவட்டாரப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலர் சின்னராஜு, சமூக ஆர்வலர் இளசை மணியன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com