கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு நீலாதேவி பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சுந்தரராஜ பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்து சுவாமி, நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, தொழிலதிபர் சபரிகணேஷ், கோயில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவி ஆணையருமான அன்னக்கொடி, கோயில் நிர்வாக அலுவலர் (பொ) ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com