சுற்றுச்சூழல் பாதுகாப்பு சைக்கிள் பயணம்: குழுவினருக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, புணேவில் தொடங்கி கன்னியாகுமரிக்குச் செல்லும் சைக்கிள் பயண குழுவுக்கு கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, புணேவில் தொடங்கி கன்னியாகுமரிக்குச் செல்லும் சைக்கிள் பயண குழுவுக்கு கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 155ஆவது பிறந்த நாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடம் மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி புணே ராமகிருஷ்ணா மடத்திலிருந்து ஒரு குழுவினர், டிசம்பர் 24ஆம் தேதி சைக்கிள்களில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் நோக்கி புறப்பட்டனர்.  இவர்களுக்கு, கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தனியார் அச்சகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அரசல் பல்க் அதிபர் நெல்லையப்பன் தலைமை வகித்தார். தொழிலதிபர் கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, பொறியாளர் ரமேஷ்குமார், அச்சக மேலாளர் முருகேசன், நாடார் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி ஆகியோர் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டோரை வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, சைக்கிள் பயண குழுவினர் திருநெல்வேலி நோக்கி புறப்பட்டனர்.  
நிகழ்ச்சியில், இந்து முன்னணியைச் சேர்ந்த காசிமாரியப்பன், பாஜக நிர்வாகி பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில்பட்டி விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com