புன்னைக்காயல் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு

புன்னைக்காயலில் குடிநீர்ப் பிரச்னை எதிரொலியாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டது.

புன்னைக்காயலில் குடிநீர்ப் பிரச்னை எதிரொலியாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டது.
புன்னைக்காயலில் தற்போது கடும் குடிநீர்ப் பிரச்னை நிலவி வருகிறது. இதையடுத்து, இது தொடர்பாக ஊர்க்கமிட்டித் தலைவர் ஜோசப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை கிஸோக் அடிகளார் முன்னிலை வகித்தார்.
இதில், ஏரல் ஆற்றிலிருந்து புன்னைக்காயலுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தற்போது தடைபட்டிருப்பதால், அத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசிடம் கோரிக்கை வைப்பதோடு, அத்திட்டம் நிறைவேற புன்னைக்காயல் சார்பில் ஒத்துழைப்பு அளிப்பதென்றும், குடிநீர்ப் பிரச்னையில் சிறிதும் அக்கறை காட்டாத புன்னைக்காயல் ஊராட்சி அலுவலகத்துக்குப் பூட்டு போடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் ஊர்க்கமிட்டி சார்பில் பூட்டு போடப்பட்டது.
புன்னைக்காயல் பகுதிக்கு கடந்த 28 நாள்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம்  செய்யப்படவில்லை என்றும், ஆழ்குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரும் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com