ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா 18இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா இம்மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசைத் திருவிழா இம்மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஜன. 29ஆம் தேதி வரை 12 நாள்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, ஜன.17ஆம் தேதி பிற்பகலில் பழையகாயல் அருகிலுள்ள சங்குமுகத்தில் தாமிரவருணி ஆறும் கடலும் கலக்குமிடத்தில் புனித தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெறுகிறது. 18ஆம் தேதி  காலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. 2ஆம் திருநாள் முதல் 9 ஆம் திருநாள் வரை காலை, இரவில் சுவாமி விசேஷ அலங்காரங்களுடன் எழுந்தருளி பவனி நடைபெறும்.
தை அமாவாசை: பத்தாம் திருநாளான ஜன. 27ஆம் தேதி தை அமாவாசை தினத்தன்று பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் ஸ்ரீசேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெறும். 28ஆம் தேதி பதினோராம் திருநாள் காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பிற்பகல் ஒரு மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறுகிறது. மாலையில் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10.30-க்கு கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.
ஜன.29ஆம் தேதி 12ஆம் திருநாள் காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30-க்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன தரிசனமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com