இணையதளம் மூலம் சரக்கு, சேவை வரி பதிவு செய்ய அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் இணையதளம் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பதிவை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் இணையதளம் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பதிவை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விரைவில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.  வணிகர்கள் தங்கள் விவரங்களை 1.1. 2017 முதல் www.‌g‌s‌t.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களது மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் ‌h‌t‌t‌p‌s:​c‌t‌d.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  மூலம் பெறப்பட்ட தற்காலிக (ID) மற்றும் கடவுச்சொல்(Pa‌s‌s‌w‌o‌r‌d) ஆகியவற்றை உபயோகித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவை பூர்த்தி செய்ய ‌h‌t‌t‌p‌s:​c‌t‌d.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  இணையத்தில் உள்ள உதவிக்கோப்பை (H‌e‌l‌p​ F‌i‌l‌e)  பயன்படுத்திக் கொள்ளலாம்.  வணிகவரித் துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
 எனவே,  அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com