திருச்செந்தூர் அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த நிதியாண்டுகளில் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளி வளாகத்தில் சிமென்ட் கற்களாலான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் நிறைவடைய வேண்டிய நிலையில் உள்ள தளங்கள் பகுதியை அவர் பார்வையிட்டதுடன், பள்ளி மாணவிகள் மற்றும் உதவி தலைமையாசிரியர் க. சங்கரி, உடற்கல்வியியல் ஆசிரியர் முருகன் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டார்.
நிகழ்ச்சியின் போது, திமுக ஒன்றியச் செயலர்கள் செங்குழி ஏ.பி. ரமேஷ், டி.பி. பாலசிங், நகரச் செயலர் பெ. மந்திரமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் மா. சுரேஷ், சு. கோமதிநாயகம், ஜெ. அந்தோணிட்ரூமன், மா. சுதாகர், க. ராஜமோகன், வக்கீல் கிருபா, தோப்பூர் தனசேகரன், ஜாண் டேவிட்ராஜா, கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com