திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கான பாவை விழா போட்டிகள், தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
ஒப்பித்தல் போட்டியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில் வரண்டியவேல் ஹிந்து நடுநிலைப் பள்ளி மாணவி காவிய மதிவதினி முதலிடத்தையும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவர் முத்துசங்கர் முதலிடத்தையும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில் காஞ்சி சங்கரா பள்ளி மாணவி வெண்ணிலா முதலிடத்தையும் பிடித்தனர்.
இதேபோல, கட்டுரைப் போட்டியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில், ஸ்ரீவைகுண்டம் டிவிஆர்கே இந்து பள்ளி மாணவி ந. கோமதி முதலிடத்தையும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில், தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவி மித்ரா முதலிடத்தையும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகள் பிரிவில் காமாட்சி வித்யாலய பள்ளி மாணவி பிரசா முதலிடத்தையும் பிடித்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. 1000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையர் அன்னக்கொடி, சிவன் கோயில் நிர்வாக அலுவலர் அஜித் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com